Honda Accord காரோட்டி மீது கொலை முயற்சி உட்பட 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்

பத்து பாஹாட், பிப்.15-

வாகனத்தை நிறுத்தும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைப் பொருட்படுத்தாமல், மிக அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய மஞ்சள் நிற Honda Accord காரோட்டியை, போலீசார் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று, கைது செய்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சாலையை பயன்படுத்திய இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க அந்த காரோட்டி மீது கொலை முயற்சி உடப்ட 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.

ஆலோங் கூபுர் என்று அழைக்கப்படும் அந்த நபர், இன்று பத்து பாஹாட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS