ஷாங்ஹாய், பிப்.15-
வடமேற்கு சீனாவில் ஒரு சிறுவன், கெட்டவன் ஒருவன் தமது ஆங் பாவ் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸை அழைத்ததுன் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில், கன்சு மாகாணத்தின் லான்ஜோவில் உள்ள போலீசாருக்கு ஒரு சிறுவனிடமிருந்து அழைப்பு வந்தது: “ஒரு கெட்டவன் என் வீட்டில் இருக்கிறான், அவன் என் பணத்தை கொள்ளையடித்துவிட்டான்.” என்று அச்சிறுவன் கூறியுள்ளான்.
அழைப்பை எடுத்த அதிகாரிக்கு, “குறும்புக்காரப் பையனே, நீ போலீஸை ஏன் அழைத்தாய்!” என்று கத்திக் கொண்டிருந்த ஒருவரின் குரலும் கேட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் சிறுவனின் வீட்டிற்கு வந்தபோது, போலீஸ், நீங்கள் விரைந்து வந்து விட்டீர்கள். தயவு செய்து இந்த கெட்டவனை உடனே பிடிக்கவும் எனத் தமது தந்தையைக் காட்டி கூறியுள்ளான்.
அதனைக் கண்ட அச்சிறுவனின் தந்தை தமது மகன் சரியாகப் படித்தவன் இல்லை. காவல் துறைக்கு அவன் அழைப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் மன்னிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் போலீசார் அவர்களுக்கு இடையிலான தகராற்றைச் சமரசம் செய்து வைத்தனர். சீனாவில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகும்.