சொஸ்மா மறு ஆய்வில், மனித உரிமை கருத்தில் கொள்ளப்படும்

ஜார்ஜ்டவுன், பிப்.

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் உத்தேச மறு ஆய்வில் அடிப்படை மனித உரிமையைதயும் அதேவேளையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைநிறுத்தப்படுவதும் சம அளவில் கருத்தில் கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தில் அனைத்தையும் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் சர்ச்சைக்கு இடமான சட்டப் பிரிவு செக்‌ஷன் 13 மற்றும் மேலும் சில குறிப்பிட்ட சட்டவிதிகள் மீள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

சொஸ்மா சட்டத்தில் செக்‌ஷன் 13 ஆவது பிரிவில் குற்றவியல் அம்சங்கள் தொடர்பில் விசாரணை கைதிகளை ஜாமீனில் அனுமதி மற்றும் ஜாமீன் மறுப்பு என பிரிவுகள் இருப்பதால் சர்ச்சைக்கு இடமான பிரிவுகள்ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சைபுடின் விளக்கினார்.

இச்சட்டத்தின் கீழ் மனித உரிமைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு தேசிய பாதுகாப்பு நிலைநிறுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும்.

எனினும் சொஸ்மாவில் சில சட்டப் பிரிவுகளை மறு ஆய்வு செய்வதற்கு காலம் கனிந்து விட்டது என்பதை சைபுடின் ஒப்புக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS