சம்பந்தப்பட்ட ஆடவர், மனசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்

குளுவாங், பிப்.15-

ஜோகூர், குளுவாங், புலாதான் மாக்கோத்தா சாலை வட்டத்தில் வெள்ளை நிற Perodua Axia காரில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ச்சியாக வலம் வந்த ஆடவர், Schizophrenia என்ற ஒரு வகை மனசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நபர் மணிக்கணக்கில் அந்த சாலை வட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்ட வாகனமோட்டிகள், அந்தக் காட்சியை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். அதற்கு முன்னதாக அது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த நபரின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், சாலை வட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், குளுவாங், Enche’ Besar Hajjah Khalsom மருத்துவமனையில் , Schizophrenia நோய்க்காக மனநல சிகிச்சைப் பெற்று வருவது தெரியவந்துள்ளதாக ஏசிபி பாஹ்ரேன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS