பாயான் லெப்பாஸ், பிப்.15-
பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுயேட்சை வர்த்தக மண்டலத்தில், லெபோ கம்போங் ஜாவாவில் உள்ள மின்னியல் உபரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரு தொழிலாளருக்கு கால் முறிந்தது. மேலும் இரண்டு தொழிலாளர்கள் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.16 மணியளவில் நிகழ்ந்தது. எரிவாயு சிலிண்டரை மாற்றும் நடவடிக்கையின் போது, எரிவாயு கலன், எதிர்பாராத நிலையில் வெடித்ததாக பாயான் லெப்பாஸ் தீயணைப்பு நிலையை ஒருங்கிணைப்பாளர் அப்துல் மானான் காதீர் தெரிவித்தார்.
காயமுற்றவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக ஆபத்து, அவசர சிகிக்சை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.