சுங்கை பட்டாணி, பிப்.15-
ஆவேசமாக நடந்துக்கொண்ட 32 வயது ஆடவரை கைது செய்யும் முயற்சியின் போது நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்ற வேளையில் போலீகாரர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் அந்த ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செரி உத்தாமாவில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது.
வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த ஆடவரை வளைத்துப்பிடிக்க முற்பட்ட போது அந்த ஆடவரின் தாக்குதலில் நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்றதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் தெரிவித்தார்.
இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி பிரயோகத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.