லோரியினால் மோதப்பட்ட குடும்ப மாது சம்பவ இடத்திலேயே பலி

ஜித்ரா, பிப்.15-

விபத்தில் காயமுற்ற தனது மகனை காரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் அவசர வேளையில் லோரியினால் மோதப்பட்டு குடும்ப மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இத்துயரச் சம்பவம், கெடா, ஜித்ரா, Hosba என்ற இடத்தில் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.

தனது மகனை Perodua Axia காரில், முதலில் Changlun-னில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு தூக்கிச் சென்றுள்ளார். வார இறுதி நாள் காரணமாக கிளினிக் அடைக்கப்பட்டு இருந்ததால், ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த விபத்து நேர்ந்தது.

WATCH OUR LATEST NEWS