பெட்டாலிங் ஜெயா, பிப்.15-
தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த மாதம் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் கைது ஒருவரின் மரணம் தொடர்பில் கைதி ஒருவரை விசாரணை செய்வதற்கான தேதி, Suhakam எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் இரு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கான தேதியை சிறைச்சாலை இலாகா தலைமை இயக்குநர் ஏற்படுத்தி தந்து விட்டார். Suhakam-மின் இரு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கைதியை விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை இலாகா தலைமை இயக்குநர் ஏற்பாடு செய்து இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.
கைதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பேரா மாநில போலீசார், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 82 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.