பத்துமலை, பிப்.15-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்பட்ட தைப்பூசம் இம்முறை பத்துமலை திருத்தலத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு காணிக்கை செலுத்தினர்.

இந்நிலையில் பத்துமலை தைப்பூச உண்டியல் காணிக்கைப் பணம் இன்று சனிக்கிழமை காலையில் பத்துமலை திருத்தலத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் எண்ணப்பட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தலைமையில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், சந்திரசேகரன், டிஎன்பி, நாராயணசாமி, , பொருளாளர் டத்தோ பெ. அழகன், செயலாளர் சேதுபதி உட்பட வாரிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணினர் என்பது குறிப்பிடத்தக்கது.
