15 மலேசியர்களைச் சந்தித்தது மலேசியத் தூதரகம்

பாங்கோக், பிப்.16-

மியான்மாரில் வேலை மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 15 மலேசியர்களைத் தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகம் சந்தித்தது. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இன்று தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள Tak மாகாணத்தில் உள்ள Fort Vachiraprakan இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூதரக அதிகாரிகள் அவர்களைப் பார்வையிட்டு, மலேசியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றதாக தாய்லாந்துக்கான மலேசியாவின் தற்காலிக பொறுப்பாளர் Bong Yik Jui தெரிவித்தார்.

இந்த 15 மலேசியர்களும், மியான்மாரில் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட 261 பேரில் அடங்குவர். அவர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டனர். தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து, மலேசிய தூதரகம் இவர்களின் அடையாளத்தை உறுதி செய்து, குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, விரைவில் மலேசியாவுக்குத் திரும்ப உதவிகளைச் செய்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS