கோலாலம்பூர், பிப்.16-
தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் குழந்தை ஆபாசம், மோசடி , சூதாட்டம் போன்ற இணைய குற்றங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்த திருத்தங்களின் கீழ், சில குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். குறிப்பாக, முன்பு பொதுப்படையாக வரையறுக்கப்பட்டக் குற்றங்கள் இப்போது மிகவும் துல்லியமாகவும், குறிப்பாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சரியாக முன்வைக்கப்படுவதை உறுதிச் செய்ய முடியும் என தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களைப் பற்றி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், செய்திகளைச் சரிபார்த்து உறுதி செய்த பின்னரே பகிர வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், நம்பகமான தகவல்களுக்கு முதன்மை ஊடகங்களை அணுகுமாறும் அவர் வலியுறுத்தினார்.