கோலாலம்பூர், பிப்.16-
Hejira Travel & Tours Sdn Bhd என்ற உம்ரா பயண ஏற்பாட்டாளர் நிறுவனத்திற்கு எதிராக இதுவரை காவல் துறை 141 புகார்களைப் பெறப்பட்டுள்ளது. இந்த புகார்களில் 3.01 மில்லியன் ரிங்கிட் இழப்பு சம்பந்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மோசடி, ஏமாற்றுதல் குற்றங்களுக்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சில புகார்கள் சுற்றுலாத் தொழில் சட்டம் 1992 இன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரமான சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சிற்கும் அனுப்பப்பட்டுள்ளன எனக் கூறினார் புகிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் டத்தோஶ்ரீ ரம்லி முகமட் யூசோப்.
இந்த வழக்கு விசாரணையைக் காவல் துறையும் மற்ற ஏஜென்சிக்கும் பரிந்துரைத்தது ஏன் என்று Mind Pro Management நிறுவனம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த டத்தோஶ்ரீ ரம்பி, அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதாகக் கூறினார். மேலும், வெவ்வேறு அமலாக்க நிறுவனங்களுக்கு வெவ்வேறு விசாரணை அதிகாரங்கள் உள்ளன என்பதையும், ஒவ்வொரு குற்றமும் அதன் தன்மைக்கு ஏற்ப உரிய நிறுவனத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் டத்தோஶ்ரீ ரம்லி சுட்டிக்காட்டினார். கடந்த மாதம், இந்த நிறுவனத்தின் உம்ரா பயண ஏற்பாடுகள் தாமதமானதால் சுமார் 300 பயணிகள் தவிப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.