கெடாவில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கல்வி ஆண்டைத் தொடங்கினர்

சுங்கை பட்டாணி, பிப்.16-

கெடா முழுவதும் 548 தொடக்கப் பள்ளிகளிலும் 204 இடைநிலைப் பள்ளிகளிலும் 3 இலட்சத்து 49 ஆயிரத்து 966 மாணவர்கள் இன்று 2025/2026 கல்வி ஆண்டைத் தொடங்கினர். இதில் 200,575 பேர் தொடக்கப் பள்ளியிலும் 1 இலட்சத்து 49 ஆயிரத்து 392 பேர் இடைநிலைப் பள்ளியிலும் தங்கள் கல்வியைத் தொடங்கியதாக கெடா மாநிலக் கல்வி இயக்குநர் இஸ்மாயில் ஒத்மான் தெரிவித்தார்.

74 ஆயிரத்து 3 பேர் புதிய மாணவர்களில் 13 ஆயிரத்து 855 பேர் பாலர் பள்ளி மாணவர்கள், 29 ஆயிரத்து 934 பேர் முதலாம் ஆண்டு மாணவர்கள், 30 ஆயிரத்து 194 பேர் முதலாம் படிவ மாணவர்கள் ஆவர். பள்ளிச் சூழலை அன்பு, பாசத்துடன் உருவாக்க, கற்றல் கற்பித்தல் மிகவும் நட்பான, மகிழ்ச்சியான முறையில் கவனம் செலுத்தும் வகையில், பள்ளியின் முதல் நாள் சுமூகமாகச் சென்றது என்று அவர் இன்று இங்குள்ள பாகார் ஆராங் இடைநிலைப் பள்ளியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

30 ஆயிரத்து 11 ஆசிரியர்களுடனும் 4 ஆயிரத்து 320 அமலாக்கப் பிரிவு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளும் இன்று சுமூகமாக நடைபெற்றன என்றும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS