கோலாலம்பூர், பிப்.16-
நாட்டில் இன, மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அல்லது அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், சமரசம் செய்யப்படாது என்றும் ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.
மக்காச்சோளம் விற்பனையாளர் ஒருவர் இனவாதம் கொண்ட அறிவிப்புப் பலகையை வைத்தது சமூக வலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, X தளத்தில் தனது கண்டனத்தைத் தெரிவித்தார் டத்தோ ஆரோன். பல்லின மக்களைக் கொண்ட நாடாக, மலேசிய மக்கள் எந்தவொரு தரப்பினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் எந்தவொரு அறிக்கையோ அல்லது நடவடிக்கையையோ அனுமதிக்காமல், எப்போதும் நல்வாழ்வையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மக்காச்சோளம் விற்பனையாளரின் செயல்பாடு எல்லை மீறியது என்றும், இனவாத மனப்பான்மைக்காக அவரைக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆரோனின் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.