சிரம்பான், பிப்.16-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரமலான் சந்தைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் அல்லது வியாபாரம் செய்ய அனுமதிக்கும் கடை உரிமையாளர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விதிமுறைகளை மீறினால் உடனடியாக கடைகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாடு, போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார் தெரிவித்தார்.
இரமலான் சந்தைகள் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும், அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடமாக மாற்றக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடை உரிமையாளர்கள் தாங்கள் விண்ணப்பித்த கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.