புதாதான், பிப்.16-
நாடு முழுவதும் உள்ள இரமலான் சந்தைகளில் உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணிப்பு மேற்கொள்ளும். கடைகளில் அதிக விலை நிர்ணயம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை அமைச்சர் ஃபுசியா சால்லே கூறினார்.
சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், ஈரச் சந்தைகள் , சிறிய சந்தைகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் KPDN அமலாக்கப் பிரிவினரின் முக்கிய பரிசோதனை இடங்களில் இரமலான் சந்தைகளும் ஒன்றாகும். அதிக விலைக்கு நோன்பு துறக்கும் உணவுகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் யாரும் இருக்கக்கூடாது என்பதை தமது தரப்பு உறுதி செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.