லோரியின் பின்னால் மோதி, மோட்டார் சைக்கிளோட்டி பலி

கூலாய், பிப்.18-

லோரியின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி, கடுமையான காயங்களுடன் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இரவு 7.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 24.6 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், கூலாய்க்கு அருகில் நிகழ்ந்தது.

லோரியின் முன் டயர் கிழிந்ததால், ஆபத்து அவசர தடத்தில் ஒதுங்குவதற்கு அந்த கனரக வாகனம் முற்பட்ட வேளையில் அதன் பின்னால் மோட்டர் சைக்கிளுடன் 30 வயது ஆடவர் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.எஸ்.பி. தான் செங் லீ தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS