கோலாலம்பூர், பிப்.18-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மேற்காசிய நாடான Bahrain-னுக்கு இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கி, 20 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார்.
மத்திய கிழக்கில் வீற்றிருக்கும் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடான Bahrain- னுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும். Bahrain- பட்டத்து இளவரசரும், பிரதமருமான Salman bin Hamid AI Khalifa-வின் அழைப்பை ஏற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், Bahrain வருகையை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிரதமரின் இந்த அதிகாரத்துவ வருகையானது மலேசியாவிற்கும், Bahrain- னுக்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.