தெலுக் இந்தான், பிப்.18-
நாட்டில் வரி செலுத்துவோரில் மொத்தம் 24,700 பேர், மின்னணு முறையைப் பயன்படுத்தி உள்ளனர். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 173 மில்லியன் மின்னணு இன்வாய்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
11,600 க்கும் மேற்பட்ட இரண்டாம் கட்ட வரி செலுத்துவோர் இந்த அமைப்பு முறையைப் பயன்படுத்தி, வரி செலுத்தியுள்ளதாக துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனுக்காக வரி கசிவைக் குறைப்பதில் இந்த அமைப்பு முறை உகந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புவதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.
இன்று தெலுக் இந்தானில், Menara Hasil, Lembaga Hasil dalam Negeri கட்டட திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.