புஞ்சாக் ஆலாம், பிப்.18-
ஒருவரையொருவர் அனுசரித்து, குடிபுகும் புதிய வீட்டை கோவிலாக கருதி, வாழ்க்கையில் அனைவரும் ஒற்றுமையாக பாசப்பிணைப்புடன் வாழவேண்டும் என உறுதிபூண்டு, புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வது ஒரு தொன்று தொட்டு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி,கார்த்திகை -போன்ற மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்தால் குடும்பம் சுபிட்சம் பெறும் என்பது நமது ஐதீகமாகும்.
நாம் குடியிருக்கப் போகின்ற வீடு, நமது மன விருப்பதை நிறைவேற்றும் என்றும், அது இறைவன் வாழும் வீடாக கருத வேண்டும் என்கிறது நமது சம்பிரதாயங்கள்.
அந்த வகையில் சிலாங்கூர், புஞ்சாக் ஆலாமில் டனேஷ் சந்திரசேகரன் – வனிதா கோவிந்தசாமி தம்பதியரின் புதிய இல்லத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு புதுமனை புகுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
Hiredly. Com நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக பணியாற்றி வரும் டனேஷ் – வனிதா தம்பதியரின் புதுமனை புகுவிழாவில் பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என நிறைய பேர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இவ்விழா விருந்து உபசரிப்பு மற்றும் இன்னிசை நிகழ்வுடன் நடைபெற்றது.
இக்கிரகப்பிரவேச நிகழ்விற்கு பசு மாடும், கன்றும் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன.
தங்கள் இல்லத்தின் புதுமனைபுகு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் டனேஷ் – வனிதா தம்பதியர் தங்களின் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
Danesh – Vanitha தம்பதியரை மனமார வாழ்த்தினர் பெற்றோர் சந்திரசேகரன் – உமாராணி தம்பதியர்.
டனேஷின் பெரியப்பா பாஸ்கரன் – முருகேஸ்வரி தம்பதியரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
டனேஷின் சகோதரர் தர்வினும் தமது மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
வருகின்ற காலங்களிலும் தங்கள் இல்லத்தில் நடைபெறவிருக்கின்ற சிறப்பான நிகழ்வுகளை, அந்த உன்னத தருணங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதாக டனேஷ்- வனிதா தம்பதியர் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டனர்.