சுடப்பட்ட நபர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல திட்டம்

கிள்ளான், பிப்.18-

இன்று அதிகாலையில் பூலாவ் கெதாமில் ஒரு ஹோட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஷா ஆலாம், செத்தியா ஆலாம் பேரங்காடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள நபர், படகின் மூலம் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அதற்கு முன்னதாகவே அதிகாலையில் போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேகப் பேர்வழி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகப் பேர்வழிக்கும், போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபர், சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் கைத்துப்பாக்கி ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS