கோலாலம்பூர், பிப்.18-
நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டல் முறையை மீறும் எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் இன்று எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட தரப்பனர் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் நினைவுறுத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை TV3 இன் நேரடி ஒளிபரப்பான 39 ஆவது Anugerah Juara lagu பாடல் திறன் போட்டியில் கலந்து கொண்ட ஆண் பார்வையாளர்கள், பெண்களை போல் உடை அணிந்து ஒய்யாரமாக தோற்றம் கொடுத்தது, அதனை அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பில் முக்கியத்துவம் அளித்தது தொடர்பில் கருத்துரைக்கையில் ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.