மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது

கோலாலம்பூர், பிப்.18-

சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமக்கு ஏற்பட்டிருந்த தசைக்கூட்டு வலிக்கு பழமைவாத சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாமன்னரின் மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் இஸ்தான நெகாரா குறிப்பிட்டுள்ளது.

மாமன்னர் தமது இளமைக் காலத்தில் இராணுவத்தில் இணைந்திருந்த போது, தீவிர பயிற்சியின் விளைவாக தற்போது அவருக்கு இந்த தசைக்கூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக இஸ்தானா நெகாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS