கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டம் இம்மாதம் இறுதியில் தொடங்கும்

ஷா ஆலாம், பிப்.20-

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டம் இம்மாதம் இறுதியில் தொடங்கும் என்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் கிழக்குக்கரை மாநிலங்களுக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையான கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் இந்த திட்டம், அடுத்த நான்கு ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்று சிலாங்கூர் அரசின் கட்டமைப்பு, விவசாயம் மீதான ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் தெரிவித்தார்.

43.3 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த திட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து பகாங் பெந்தோங் வரை சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS