கோலாலம்பூர், பிப்.20-
அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றும் குடிநுழைவு அதிகாரி ஒருவர், அந்நிய நாட்டினரின் 12 கடப்பிதழ்களை இடுப்பில் மறைத்து வைத்திருந்த செயல் குறித்து கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த குடிநுழைவு அதிகாரி, கைது செய்த போதிலும், குடிநுழைவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வு இல்லாமல் இருப்பதாக அந்த டிஏபி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
அந்த அதிகாரி, சற்று கண்ணயர்வில் இருந்த போது, அவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்நிய நாட்டவரின் 12 கடப்பிதழ்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது, மலேசிய குடிநுழைவுத்துறை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அவர் வினவினார்.
இது போன்று கடப்பிதழ்களை வைத்து இருந்தவர், சாதாணமானவராக இருந்திருந்தால், அவரை அமலாக்க அதிகாரிகள் நிச்சயம் கைது செய்து இருப்பார்கள். ஆனால், இந்த சம்பவத்தில் பிடிபட்டவர்கள் நாட்டின் பாதுகாப்பை கண்காணிக்கும் முக்கிய அதிகாரியாவார். அப்படியென்றால், தாங்கள் கொண்டுள்ள பொறுப்புக்கு ஏற்ப குடிநுழைவு அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா? என்று லிம் லிப் எங் வினவினார்.