செப்பாங், பிப்.20-
சுற்றுப்பயணிகள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த டஜன் கணக்கான அந்நிய நாட்டவர் பிடிபட்டனர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததும், குடிநுழைவு சோதனைக்கு உடனடியாக உட்படாமல், குறிப்பிட்ட தரப்பினருக்காக காத்திருப்பதைப் போல காணப்பட்ட அந்த அந்நிய நாட்டவரின் நடமாட்டத்தில் சந்தேகித்த KLIA எல்லை கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் அனைவரையும் வளைத்துப் பிடித்தனர்.
ஒரு பெண் உட்பட 68 பேர் இதில் பிடிபட்டனர். 16 பாகிஸ்தானியர்கள், 45 வங்காளதேசிகள், 7 இந்தியர்கள் பிடிபட்டவர்களில் அடங்குவர்.
இவர்கள் அனைருவம் குடிநுழைவு சோதனைக்கு உட்படாமல், விமான நிலையை வருகையாளர் பகுதியில் கடைகளிலும், உணவகங்களிலும் சுற்றித் திரித்துக்கொண்டிருந்த போது பிடிபட்டனர்.