சட்டம் திருத்தப்படுவது, நடப்பு பிரச்னைக்கு தீர்வாகாது

பெட்டாலிங் ஜெயா, பிப்.20-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மா, திருத்தப்படுவது மூலம் நடப்பு பிரச்னைக்கு தீர்வாகாது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அந்த கொடுங்கோல் சட்டத்தில் நிறைய குறைபாடுகள் இருப்பதாக வழக்கறிஞர் மன்றம் கூறுகிறது. சொஸ்மாவில் சட்டத்திருத்தங்கள் செய்வதைக் காட்டிலும், அதனை ரத்து செய்வதே நடப்பு பிரச்னைக்கு தீர்வாகும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் வாதிட்டுள்ளது.

சொஸ்மா சட்டம், அமலாக்கத் தரப்பினருக்கு மிகப் பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதனால், அந்த சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்படலாம்.

சொஸ்மாவை ரத்து செய்யும் தனது நிலைப்பாட்டில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் எஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS