உணவு விநியோகப் பெண்மணி கொலை, சந்தேகப் பேர்வழிக்கு தடுப்புக்காவல் நீடிப்பு

பிப்,21

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி குவந்தான், Sungai Kuantan, Tanjung Lumpur பாலத்திற்கு அருகில் உணவு விநியோகப் பெண்மணி ஒருவர், மிக கொடூரமாக கொலையுண்டு கிடந்தது தொடர்பில் பிடிபட்டுள்ள 53 வயது சந்தேகப் பேர்வழியின் தடுப்புக்காவலை போலீசார் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடித்துள்ளனர்.

37 வயது Norshamira Zainal என்ற அந்தப் பெண்மணி கொலை தொடர்பான விசாரணைக்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, இன்று குவந்தான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் Nor Izzati முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி, வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை பெறப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருவதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS