பத்தாங் காலி, பிப்.21-
சிலாங்கூர், பத்தாங் காலி, சுங்கை மாசீனில் உள்ள மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசலில் இன்று காலையில் ஆடவர் ஒருவர், சிறுமி ஒருவரை பலவந்தமாகக் கட்டியணைத்து, மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் புகார் ஒன்றை பெற்றிருப்பதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் பைசால் தாஹ்ரின் உறுதிச் செய்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் விசாரணைக்குப் பின்னர் போலீசார் ஓர் அறிக்கையை வெளியிடுவர் என்று அகமட் பைசால் தெரிவித்தார்.
அந்த பள்ளிவாசலில் இன்று காலை தொழுகை நடைபெற்று கொண்டிருந்த போது, பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சந்தடியின்றி சென்ற ஆடவர் ஒருவர், சிறுமி ஒருவரைக் கட்டியணைத்து, பாலியல் சேட்டை புரிய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அந்த பள்ளி வாசலில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.