Man Tiger மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

குளுவாங், பிப்.21-

Man Tiger என்று அழைக்கப்படும் ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஜோகூர், குளுவாங், Machap என்ற இடத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, கணவன், மனைவியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக 33 வயது அப்துல் ரஹ்மான் அப்துல்லா என்ற அந்த ஆடவர், குளுவாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த சம்பவத்தில் 37 வயது டியான் யூலாண்டி சூபோ என்ற மாதுவும், அவரின் 38 வயது கணவர் அஷ்மாட் பாதுல்லா ஆகிய இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பின்னிரி 12.17 மணியளவில் மாசாப், புகிட் பத்துவில் Man Tiger இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் Man Tiger குற்றச்சாட்டை எதிர்நோக்கி வருகிறார்.

WATCH OUR LATEST NEWS