கோலப்பிலா, பிப்.21-
நெகிரி செம்பிலான், கோலப்பிலாவில் தொழுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. தொழுநோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை ஆக்கப்பூர்மான பலனைத் தந்துள்ளது என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. கோலப்பிலாவில் ஓராங் அஸ்லி மக்கள் வசித்து வரும் இரண்டு பூர்வகுடி கிராமங்களில் தொழு நோய் பரவியுள்ள வேளையில் இந்நோய்க்கு இதுவரை ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது பெண் பலியாகியுள்ளார்.