கோலாலம்பூர், பிப்.21-
மத்திய கிழக்கு நாடான பாஹ்ரேனுக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை 5 மணியளவில் நாடு திரும்பிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த சில மணி நேரத்திலேயே புத்ராஜெயாவில் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பான்ரேன் மற்றும் புருணைக்கு தாம் மேற்கொண்ட பயணங்களின் பலாபலன்கள் குறித்து விளக்கம் அளித்ததாக தமது முகநூலில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பும், புதிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் இறைவன் அருளில் மலேசியாவிற்கு நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.