மூன்று மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் இருக்கக்கூடாதா? அரசியலாக்க வேண்டாம்

ஈப்போ, பிப்.21-

பேரா மாநிலத்தில் மஞ்சோங், ஆயர் தாவார் பொது சந்தையான பசார் ஆவாமில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை, மலாய், சீனம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சியினரை டிஏபி இளைஞர் பிரிவு கடுமையாகக் சாடியது.

பொதுச் சந்தைகளில் அறிவிப்பு பலகையில் மூன்று மொழிகள் இருப்பதில் என்ன தவற்றைக் கண்டு பிடித்து விட்டனர் என்று டிஏபி இளைஞர் பிரிவுத் தவைர் வூ கா லியோங் கேள்வி எழுப்பினார்.

பொதுச் சந்தை அறிவிப்புப் பலகையில் மூன்று மொழிகள் இடம் பெற்று இருப்பது வழக்கமான நடைமுறையாகும். இந்த நடைமுறை, இதர பொது சந்தைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் கூட இது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்று வூ கா லியோங் தெளிவுபடுத்தினார். உதாரணத்திற்கு தெலுக் இந்தான் பசார் பெசார் பொதுச் சந்தையில் உள்ள அறிவிப்புப் பலகையிலும் 3 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோன்று ஈப்போ, தைப்பிங்கிலும் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவதைவிட்டு, இது போன்ற சிறு சிறு விவகாரங்களை முன்நிறுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று பெரிக்காத்தான் நேஷனலுக்கு அவர் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS