பத்தாங் காலி, பிப்.21-
சிலாங்கூர், பத்தாங் காலி, சுங்கை மாசீனில் உள்ள மஸ்ஜிட் ஜாமேக் பள்ளி வாசலில் காலை நேர தொழுகையின் போது, பெண்கள் பகுதியில் அமர்ந்திருந்த சிறுமி ஒருவரைக் கட்டியணைத்து, மானபங்கம் புரிந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 8.19 மணியளவில் கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, மதிய நேரத்தில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
பத்தாங் காலியில் பிடிபட்ட அந்த நபர், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதி பெறப்படும் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.