மூவார், பிப்.21-
சாலையைக் கடக்க முற்பட்ட வங்காளதேச ஆடவர் ஒருவரி லோரியினால் மோதப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 6.51 மணியளவில் ஜோகூர், பாக்ரி, ஜாலான் மூவார் – யொங் பெங் சாலையில் நிகழ்ந்தது.
அந்த வங்காளதேசியை மோதித் தள்ளியதாக நம்பப்படும் லோரி, நிற்காமல் சென்று விட்டதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
உடலில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். லோரி ஓட்டுநர் தற்போது தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.