கைக்கடிகாரங்கள் விற்பனையில் மோசடி, இரண்டு உதவி நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப்,21-

சுமார் 20 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேலான மதிப்பைக் கொண்ட ஆடம்பர கைக்கடிகாங்கள் விற்பனையில் நான்கு தனிநபர்களை ஏமாற்றியதாக கைக்கடிகாரம் கடை ஒன்றின் இரண்டு துணை நிர்வாகிகள்,கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

35 வயது மிக்கி ஓஷிரோ மற்றும் 41 வயது யாப் சூன் ஹான் ஆகிய இருவரும் நீதிபதி ஹமிடா முகமட் டெரில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

28 வயது சிங்கப்பூர் பிரஜை உட்பட நால்வரை நம்பவைத்து, ஏமாற்றியதாக இவ்விருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம்தேதி கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் அவ்விருவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS