தொழுநோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சிரம்பான், பிப்.21-


நெகிரி செம்பிலான், கோலப்பிலாவில் இரண்டு பூர்வகுடி கிராமங்களில் தொழுநோய் பரவியிருப்பதாகக் கிடைக்கப் பெற்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில மந்திரி பெசார் டதோஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

செர்குன் மற்றும் குந்தூர் ஆகிய இரண்டு ஓராங் அஸ்லி கிராமங்களில் பரவியுள்ள தொழுநோய் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சுக்கு மாநில அரசாங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அமினுடின் ஹாருன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS