ஜோகூர் பாரு, பிப்.21-
ஜோகூர் பாருவில் கொண்டோமினியம் வீட்டொன்றில் போதைப்பொருளை பதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்றை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி போலீசார் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
போலீசாரின் உளவுத் தகவல் அடிப்படையில் ஜோகூர்பாரு, பண்டார் டத்தோ ஓனில் உள்ள அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஹூண்டாய் ரக கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது மூலம் 4.12 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.