சிப்பாங், பிப்.21-
அந்த சோள வியாபாரியின் இந்தோனேசிய மனைவி எவ்வித பயண ஆவணமும் கொண்டிருக்காத குற்றத்திற்காக அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
64 வயதுடைய அப்துல் அஸிஸ் மூசா என்ற அந்த சோள வியாபாரி கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி கோத்தா வாரிசானில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவரின் 52 வயதுடைய மனைவி, 1959 ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். இத்தம்பதியர், சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜி. ஷான் கோபால் கிருஷ்ணன் தெரிவித்தார்.
கணவனும், மனைவியும் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சோள வியாபாரியின் இனத்துவேஷச் செயல் தொடர்பான காணொளி அண்மையில் சமூக வலைத் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலர் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த சோள வியாபாரி மன்னிப்புக் கோரினார்.
எனினும் இனத்துவேஷம் புரிந்த குற்றத்திற்காக அவரையும், அவரின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.