சாம்பியன்ஸ் லீக்: லிவர்பூல், பிஎஸ்ஜி மோதல்

பாரிஸ், பிப்.21-

UEFA சாம்பியன்ஸ் லீக்கின் கடைசி 16 அணிகளுக்கான ஆட்டமொன்றில் லிவர்பூல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனைச் சந்திக்கிறது. லிவர்பூல் 36 அணிகள் கொண்ட லீக் கட்டத்தை முதல் நிலையில் முடித்தது. இயல்பாகவே  இந்தச் சுற்றுக்குத் தகுதி பெற, PSG பிளேஆஃப்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அது ப்ரெஸை 10-0 என்ற மொத்த கோல் கணக்கில் தோற்கடித்தது. 

கடைசி 16 அணிகளுக்கான முதல் கட்ட ஆட்டம் மார்ச் 4 அல்லது 5 ஆம் தேதி பாரிஸில் உள்ள பார்க் டெஸ் பிரின்சஸில் நடைபெறும். இரண்டாம் கட்ட ஆட்டம் ஒரு வாரம் கழித்து ஆன்ஃபீல்டில் இருக்கும். 
 

மற்ற முக்கிய ஆட்டங்களில், நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட்டை சந்திக்கிறது. ஆர்செனல், பிஎஸ்வி ஏண்டோவனுடன் மோதுகிறது. பார்செலோனா, பென்ஃபிகாவுடன் களம் காண்கிறது. 

WATCH OUR LATEST NEWS