கோலாலம்பூர், பிப்.22-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாயைத் திறந்தாலே பொய்தான் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அன்வார் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் பொய்யைதான் காண முடிகிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தம்மை சந்திப்பதற்கு ஆர்வப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களை அன்வார் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று துன் மகாதீர் கூறிய குற்றச்சாட்டை அன்வார் வன்மையாக மறுத்துள்ளார்.
ஆனால், இதனை அன்வார் மறுத்து இருப்பது ஒரு பொய்யாகும் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
அன்வார் இதனை மறுக்கலாம். ஆனால், பொய் வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்த விரும்புகிறேன் என்று இன்று தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் துன் மகாதீர் இதனை தெரிவித்துள்ளார்.