மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் மாமன்னர் நாடு திரும்பினார்

கோலாலம்பூர், பிப்.22-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இன்று காலையில் நாடு திரும்பினார்.

மாமன்னரின் சிறப்பு விமானம், இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் சுபாங், அரச மலேசிய ஆகாயப்படை தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

மாமன்னரை, இஸ்தானா நெகாராவின் மேலாளர் Bijaya Diraja Istana Negara, Datuk Zailani Hashim, Datuk Paduka Maharaja Lela Istana Negara, Datuk Azuan Effendy Zairakithnaini ஆகியோர் வரவேற்றனர்.

WATCH OUR LATEST NEWS