ஈப்போ, பிப்.22-
வரும் புனித ரமலான் மாதத்தில் பேரா மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பணி முடிவடையும் நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு புறப்படுவது குறித்து மாநில அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று மாநில மந்திர பெசார் டத்தோஶ்ரீ சாராணி முகமட் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீட்டிற்கு புறப்படுவதற்கு பகாங் மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே முன்கூட்டியே வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பேரா மாநில அரசாங்கம் இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, ஆட்சிக்குழுவில் இன்னும் விவாதிக்கவில்லை என்று சாராணி முகமட் குறிப்பிட்டார்.