கோலாலம்பூர், பிப்.22-
மற்ற மதங்களைச் சார்ந்தவர்களின் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு நெறிமுறை வழிகாட்டலை அரசாங்கம் உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள மலேசியாவிற்கான முன்னாள் தூதர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் சமூகவியல் வாழ்க்கை முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு அப்படியொரு வழிகாட்டலோடு நடத்தப்பட வேண்டிய நிர்பந்தமும், அவசியமும் இல்லை என்று நஸ்ரி தெளிவுபடுத்தினார்.
இப்படியொரு வழிகாட்டல் முறையை வழிந்து திணிப்பது எந்த. அகையிலும் நியாயமில்லை, அதற்கான அவசியமும் இல்லை.
முஸ்லிம்களின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கிவிட்டது. அதற்கான அடிப்படையும், நெறிமுறைகளையும் அது வகுத்துள்ளது என்று நஸ்ரி கூறினார்.