முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் அனுமதி

பெட்டாலிங் ஜெயா, பிப்.22-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று அதிகாலையில் சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

65 வயதான இஸ்மாயில் சப்ரி, மருத்துமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதை அவரின் உதவியாளர் இகாமால் ஹாகிம் உறுதிப்படுத்தினார். எனினும் மேல் விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

முன்னாள் பிரதமர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டுமே குருந்தகவலை இகாமால் ஹாகிம் அனுப்பியுள்ளார்.

இஸ்மாயில் சப்ரி, கோத்தா டாமன்சாராவில் உள்ள சன்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் மற்றோர் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS