பெட்டாலிங் ஜெயா, பிப்.22-
விமர்சனங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தில் உள்ள எந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார். மக்களின் குரலையும் விருப்பங்களையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கமாக செயல்பட அமைச்சரவை ஒற்றுமையாக இருக்கவும், ஒன்றிணைந்து செயல்படவும் அவர் அழைப்பு விடுத்தார்.
புவிசார் அரசியல் சூழ்நிலை மற்றும் தொழில்நுட்பம் உட்பட, நாம் வாழும் தற்போதைய சகாப்தம், எந்தவொரு அரசாங்கமும் விரைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களுக்காக திறம்பட செயல்பட, குறைகளை நிவர்த்தி செய்யும் நிலையை அமைச்சரவை உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.