பள்ளிகளுக்கு வெளியே விற்பனையாளர்களைக் கட்டுப்படுத்த குழுவை அமைக்க வேண்டும்

மலாக்கா, பிப்.22-

பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் உணவு பண்டங்கள் விற்பனையாளர்களின் பிரச்சினையை சமாளிக்க பள்ளி நிர்வாகங்கள், மாநகர் மன்றம் அல்லது நகராண்மைக்கழகம் போன்ற ஊராட்சி மன்ற அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கு வெளியே ஒரு விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஜவ்வு மிட்டாய், தொண்டையில் சிக்கி 4 ஆம் படிவ மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு வெளியே விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களைக் காண்காணிப்பதற்கும், சோதனை செய்வதற்கும் கூட்டுக்குழு அமைக்கப்படுவது அவசியமாகும் என்று என்று கல்வியில் பெற்றோர்களுக்கான மலாக்கா செயற்குழு உறுப்பினர் மாக் சீ கின் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS