பிகேஆர் தேர்தல் ஏற்பாடுகள் சமூகமாக நடைபெற்று வருகிறது

கூச்சிங், பிப்.22-

பிகேஆர் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக அதன் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சால்லே தெரிவித்துள்ளார்.

கட்சித் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் வரை நடைபெறவிருக்கிறது.

முதலில் கிளை மற்றும் தொகுதி அளவில் தேர்தல் நடைபெறும். மே மாதம் இறுதியில் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS