கோல கங்சார், பிப்.22-
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென்று நகர்ந்து, உணவகம் ஒன்றை மோதியதில், அந்த உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த மாது காயமுற்றார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கோல கங்சார், ஜாலான் டாயெங் செலிலி என்ற இடத்தில் நிகழ்ந்தது.
சாலை வளைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்த பேருந்து, உணவகத்தை மோதுவதற்கு முன்னதாக கார் ஒன்றை மோதி தள்ளிய பின் உணவகத்திற்குள் நுழைந்ததாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேஷாம் ஹாருன் தெரிவித்தார்.
இதில் 51 வயதுடைய மாது, உணவகத்தின் சுவர் கற்கள் தெறித்து காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.