ஷா ஆலாம், பிப்.22-
இன்று காலையில் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைக் காண்பதற்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
65 வயதுடைய இஸ்மாயில் சப்ரி, சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலையில் அவர் சுயநினைவு இழப்பிலிருந்து மீண்டுள்ளார். அவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று அவரின் பத்திரிகை செயலாளர் அஸ்ரான் ஃபிட்ரி ரஹீம் தெரிவித்தார்.
எனினும் இஸ்மாயில் சப்ரி, தொடர்ந்து தீவிர சிகிச்சை கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ரான் குறிப்பிட்டார்.